அஜித்தின் அடுத்த பட கதாநாயகி யார் தெரியுமா..!?

முன்னதாக நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை வலிமையாக இரு படங்களை வினோத் இயக்கத்தில் நடித்து இருந்தார். தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், ஹீரோ மற்றும் வில்லனாக அஜித்தே  நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் அஜீத் நடித்துள்ள புதிய கெட்டப் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளதுடன், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்நிலையில் இந்த அஜித் 61 படத்தில் கதாநாயகியாக யார் நடிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மலையாள நடிகை மஞ்சுவாரியர் தான் அஜித்தின் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
Rebekal