#BREAKING : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை…!

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்து வரும் வெங்கடாசலம் அவர்களின், இல்லம் மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

2019-ஆம் ஆண்டு முதல் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்து வரும் வெங்கடாசலம் அவர்களின், இல்லம் மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வெங்கடாசலம் அவர்கள் வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை சேர்த்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், அதிகாரிகள் இவர் எந்த விதமான சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.