#BREAKING: சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர்!

சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. இந்நிகழ்வின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். சென்னையில் இருந்து கோவைக்கு மணிக்கு 80 முதல் 90 கிமீ வேகத்தில் பயணிக்கும் வந்தே பாரத் ரயிலின் அதிகபட்சம் வேகம் 160 கிமீ என கூறப்படுகிறது.

490 கிமீ தூரத்தை 5.50 மணி நேரத்தில் வந்தே பாரத் ரயில் சென்றைடையும். சேவையின் முதல் நாளான இன்று பெரம்பூர், அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூரில் நின்று செல்லும். பிரதமர் மோடி தொடங்கி வைத்த சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் 3 இடங்களில் மட்டுமே நின்று செல்லும் என்றும் வாரத்தில் புதன்கிழமை தவிர்த்து மீதமுள்ள 6 நாட்களும் சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 11.50 மணிக்கு வந்தே பாரத் ரயில் சென்னை வந்தடையும். இதுபோன்று சென்னையில் இருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு வந்தே பாரத் ரயில் கோவை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்பதிவு தொடங்கிய உடனே முதல் 2 நாட்களுக்கான டிக்கெட்டுகள் முழுவதுமாக விற்று தீர்ந்தன

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment