#Breaking:முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து பேசிய பிரதமர் – முதல்வர் குற்றச்சாட்டு!

தமிழகம் தெலுங்கானா,மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைக்கவில்லை எனவும்,இதன்காரணமாகவே பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.மேலும்,தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் வாட் வரியை குறைத்து மக்களை சிரமத்திலிருந்து மீட்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி நேற்று அறிவுறுத்தியிருந்தார்.

பிடிஆர் பதிலடி:

இதனைத் தொடர்ந்து,தமிழக நிதியமைச்சர் பிடிஆர்,கடந்த 8 ஆண்டுகளில் கலால் வரியானது பெட்ரோல் மீது சுமார் 200% அளவுக்கும்,டீசல் மீதான கலால் வரி 500% அளவுக்கும் மத்திய அரசால் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டி,கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்ததுபோல வரியை குறைக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பதிலடி கொடுத்தார்.

முதல்வர் பதில்:

இந்நிலையில்,பெட்ரோல்,டீசல் விலை உயர்வு தொடர்பாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் பிரதமர் மோடி கருத்து கூறியுள்ளார் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் கூறியதாவது:

முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல்:

“பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க சில மாநிலங்கள் ஒத்துழைக்கவில்லை என்றும்,இதனால்தான் பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்துள்ளன என்றும் பிரதமர் கூறியுள்ளார்.இதன்மூலம்,முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் பிரதமர் கருத்து கூறியுள்ளார்.

மாநில வருவாயில் கை வைத்த மத்திய அரசு:

ஆனால்,2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து கச்சா எண்ணெய் விலை பெருமளவு சரிந்தபோது,அதற்கு ஏற்றாற்போல் பெட்ரோல்,டீசல் விலையை குறைக்காமல் எண்ணெய் வீழ்ச்சியால் கிடைத்த முழு உபரி வருவாயையும் மத்திய அரசு தனதாக்கி கொண்டது.

மேலும்,பெட்ரோல்,மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் மத்திய கலால் வரியானது மாநில அரசுகளோடு பகிர்ந்து அளிக்க கூடியது என்ற காரணத்தால் அதனை குறைத்து மாநில அரசுகளுக்கு அளிக்கப்படும் வருவாயில் மத்திய அரசு கை வைத்தது.

லட்சக்கணக்கான தொகை:

அதே சமயம்,பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் மத்திய தலைமை வரி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க தேவையில்லை என்பதால் இந்த வரிகளை கடுமையாக உயர்த்தி மக்கள் மீது சுமையை திணித்து அதனால் கிடைக்கும் லட்சக்கணக்கான தொகையை மத்திய அரசு தனதாக்கி கொண்டது.

வேடம் போட்ட மத்திய அரசு:

நடப்பு ஆண்டில் சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருந்த ஒரே காரணத்துக்காக,தேர்தலுக்கு முன்னர் கடந்த ஆண்டு பெட்ரோல்,டீசல் மீது விதிக்கப்படும் வரியை குறைத்து வேடம் போட்டது மத்திய அரசு.ஆனால்,தேர்தல் முடிந்த பின்னர்,மடமடவென்று பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்தி மக்கள் மீது கூடுதல் சுமையை சுமத்தியது.

உங்களிடம் விட்டு விடுகிறேன் – முதல்வர்:

ஆனால்,மத்திய அரசு குறைப்பதற்கு முன்னரே,தமிழகத்தில் தேர்தல் முடிந்த பின்னர் தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு நிதி நிலைமையையும் பொருட்படுத்தாமல் பெட்ரோல் மீது விதிக்கப்படும் மாநில வரியை தமிழக அரசு குறைத்து.

இவை அனைத்தும் தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்,உண்மையில் யார் பெட்ரோல் விலையை குறைக்க முனைப்பு காட்டுகிறார்கள்,யார் குறைப்பது போல நடித்து பலியை மற்றவர்மீதுபோடுகிறார்கள் என்ற முடிவை மக்களிடம் விட்டு விடுகிறேன்”,என்று கூறியுள்ளார்.