#BREAKING: பரந்தூர் விமான நிலையம் – போராட்டம் தற்காலிக நிறுத்தம்!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான மக்களின் பேரணி பேச்சுவார்த்தையை அடுத்து கைவிடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர் போராட்ட குழுவினர். அமைச்சருடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக முடிவு செய்துள்ளனர்.

பரந்தூர் விமான நிலையத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து இன்று மக்கள் பேரணி நடைபெற்றது. ஏகனாபுரம் உள்பட 13 கிராம மக்கள் மற்றும் விவசாய அமைப்பினர் கருப்புக்கொடியுடன் பேரணி சென்றனர்.

இந்த நிலையில், கோட்டாட்சியர், டிஎஸ்பி, தாசில்தாரர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், பேரணி தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. முதல்வரை சந்தித்து எங்களது கருத்துக்களை சொல்ல வேண்டும் என்பதே போராட்ட குழுவின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment