#BREAKING: ப.சிதம்பரம் வெற்றி செல்லும்…உயர்நீதிமன்றம்..!

கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரமும், அதிமுக சார்பில் ராஜகண்ணப்பன் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் ராஜகண்ணப்பன் தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் 3,000-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, ராஜகண்ணப்பன் சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், வாக்கு எண்ணிக்கை இறுதி முடிவுகள் அறிவிப்பதற்கு முன்பாக சில குழப்பங்கள் ஏற்பட்டது. முதலில் தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட இருந்தநிலையில்  பின்னர், அதனை நிறுத்திவிட்டு ப.சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இத்தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி முழுமையாக விசாரிக்கப்படவேண்டும் என கூறி வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் தொடர்ந்த வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பின் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி ராஜகண்ணப்பன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்தது. மேலும், ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

author avatar
murugan