#BREAKING : CBSE பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாத காலம் ஆகும் – யுஜிசி

CBSE பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாத காலம் ஆகும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு UGC கடிதம் எழுதியுள்ளது.

நாடு முழுவதும் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.ஆனால்,சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் மட்டும் இன்னும் வெளியாகவில்லை.இதனால்,கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்,சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.அதன்படி,சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில்,நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு இவ்வாறு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.மேலும், பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகளில் சேர சிபிஎஸ்இ மாணவர்களுக்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் யுஜிசி கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது, CBSE பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாத காலம் ஆகும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு UGC கடிதம் எழுதியுள்ளது. ஜூலை மாத இறுதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 2-வது வாரத்தில் முடிவுகள் வெளியாக வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment