#BREAKING : மகாராஷ்டிராவில் மேலும் 8 பேருக்கு ஓமைக்ரான் கொரோனா தொற்று உறுதி..!

மகாராஷ்டிராவில் புதிதாக மேலும் 8 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்தியாவில், மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் தான் ஓமைக்ரான் தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், மகாராஷ்டிராவில் இதுவரை 20 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிதாக மேலும் 8 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதிதாக ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள 8 பேரில், 7 பேர் மும்பையை  சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் ஓமைக்கிறான் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.