#Breaking:முல்லைப் பெரியாறில் புதிய அணை;யாரும் இப்போது பேசவேண்டாம் – உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

டெல்லி:முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது பற்றி யாரும் தற்போது பேசவேண்டாம் என உச்சநீதிமன்றம் அறிவுரை.

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில்,முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது பற்றி யாரும் இப்போது பேசவேண்டாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.முல்லைப் பெரியாறில் அணை கட்டுவது தொடர்பாக கேரள அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து புகார் இருந்தால் தங்களிடம் முறையிடலாம் என தமிழக அரசிடம் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்த நிலையில்,முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு விவகாரம் தொடர்பான வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.அப்போது,முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது பற்றி யாரும் தற்போது பேசவேண்டாம் எனவும்,அணையின் பாதுகாப்பு குறித்த வாதங்களை மட்டும் பேசுங்கள் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக,முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்துக்கு முதலில் தீர்வு காண்போம் என்றும்,அதன்பின்னர்,புதிய அணை கோரிக்கை தொடர்பாக விசாரிக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து,உங்களைப் போன்றவர்களுடைய அறிவுரைகள் எங்களுக்கு தேவையில்லை என்று கூறி,முல்லைப் பெரியாறு அணை வழக்கில் கடும் வாதங்களை முன்வைத்த வழக்கறிஞர் நெடும்பாரா வெளியேற உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.