#BREAKING: இனி கல்லூரிகளிலும் முழு பாடம் – அமைச்சர் பொன்முடி உத்தரவு

தமிழகத்தில் பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளிலும் முழு பாடங்களை நடத்த உயர்கல்வித்துறை உத்தரவு.

தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் என்றும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளில் குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்த்து முழுமையாக நடத்த வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக 10ம் வகுப்புக்கு 39%, 11, 12ம் வகுப்புகளுக்கு 35%, 1-9ம் வகுப்புகளுக்கு 50% வரை பாடங்கள் குறைக்கப்பட்டிருந்த நிலையில், முழு பாடங்களையும் நடத்த உத்ராவிடப்பட்டது.

இந்த நிலையில், பள்ளிகளைப் போல், கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களிலும் இனி அனைத்து பாடங்களும் முழுமையாக நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இந்த கல்வியாண்டில் அனைத்து கல்லூரிகளிலும் முழு பாடங்களையும் நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அனைத்து வகையான கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் 69% இட ஒதுக்கீடு கட்டாயம் என அமைச்சர் திட்டவட்டமாக கூறியுள்ளார். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் 69% இடஒதுக்கீடை பின்பற்ற சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றும் 69% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment