BREAKING NEWS:காவிரி மேலாண்மை வாரிய வழக்கில் இன்று மதியம் 2 மணிக்கு அதிரடி தீர்ப்பு..!

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் 4 மாநிலங்களும் நீரைச் சுமுகமாக பிரித்து வழங்குவதற்காக அமைக்கப்படக் காவிரி மேலாண்மை வாரியம் குறித்த தனது இறுதி உத்தரவை இன்று மதியம் 2 மணிக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கிறது .

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கின் இறுதித்தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி வரைவு செயல்திட்டத்தை மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் கடந்த மே 15 ஆம் தேதி தாக்கல் செய்தார்.

அந்த வரைவு செயல்திட்ட அறிக்கையில், நதி நீர் பங்கீடு தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஒரு குழுவை பரிந்துரை செய்திருந்தது. 9 பேர் கொண்ட அந்தக் குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் அதிகாரங்கள் வரம்புகள் குறித்த விவரமும் இடம்பெற்றிருந்தது.

ஆனால், குழுவின் முடிவுகளை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை என்றால் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கலாம் என்ற அம்சத்தைத் திருத்த வேண்டும் என மத்தியஅரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

அதன்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திசூட் ஆகியோர் முன் நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அமைப்புக்குக் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் எனப் பெயர் வைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இறுதி முடிவுகள் எடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே இருக்கும் என முன்னர் இருந்த நிலையில், தற்போது அது திருத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஆணையத்திடம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷியாம் திவான் வாதிடுகையில், கர்நாடக மாநில அரசின் ஆலோசனைகள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டன. காவிரி நதிநீர் தீர்ப்பாயம் அளித்த உத்தரவில், அணைகளுக்கு போதுமான நீர்வரத்துவரும் வரை, தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் குறைந்தபட்ச நீரை வழங்கலாம் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், வரைவு செயல்திட்ட அறிக்கையில் குறிப்பிடவில்லை. மத்திய அரசின் வரைவு செயல் திட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டதாக இல்லை என்றும், மாநில அரசின் அதிகாரம் மற்றும் செயல்பாட்டில் தலையிடுவதாக உள்ளது எனத் தெரிவித்தார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கேகே வேணுகாபால், நீர் பகிர்மானம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் செய்யக்கோரிய அனைத்துத் திருத்தங்களும் செய்யப்பட்டுவிட்டன எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, தலைமைநீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், கான்வில்கர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், 4 மாநில அரசுகளும் அளித்த ஆலோசனைகள் ஆய்வு செய்யப்பட்டு இன்று மதியம் 2 மணிக்கு  இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்….

Dinasuvadu desk

Recent Posts

உடல் எடையை குறைக்க விபரீத பயிற்சி.! 6 வயது குழந்தை உயிரிழந்த சோகம்.!

America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம். அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில்…

1 min ago

கல்குவாரியில் வெடி விபத்து – குவாரி நிர்வாகம் ரூ.12 லட்சம் நிவாரணம்!

Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…

12 mins ago

502 Error.! திணறிய கூகுள்… பயனர்கள் அதிருப்தி.!

Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில்…

42 mins ago

நிலவில் தண்ணீர் இருக்கிறது.! உறுதி செய்தது நம்ம சந்திரயான்-3.!

Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…

46 mins ago

வாகனங்களில் ஸ்டிக்கர் கட்டுப்பாடு! முக்கிய தகவல் இதோ!

Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.  சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர்,…

1 hour ago

விருதுநகர் கல்குவாரி விபத்து – நேற்று ஒருவர் இன்று ஒருவர் கைது.!

விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு…

2 hours ago