#BREAKING: நீட் தேர்வு நடைபெறும் மையங்கள் அறிவிப்பு – தேசிய தேர்வு முகமை!

நீட் நுழைவு தேர்வு நடைபெற உள்ள தேர்வு மையங்கள் பற்றி தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெற உள்ள தேர்வு மையங்கள் குறித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நீட் தேர்வை எழுத்தவுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வு மையம் குறித்த தகவலை www.neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இதனிடையே, மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு கடந்த மாதம் 13-ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடங்கி, கடந்த 10-ம் தேதியுடன் முடிவடைந்தது. நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 1 லட்சத்து 12 ஆயிரத்து 890 பேர் விண்ணப்பித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்