#BREAKING: மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தொடங்கியது!

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு தொடங்கியது. நாடு முழுவதும், இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு செப்.12-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்திருந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு தற்போது தொடங்கியுள்ளது. இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியிருக்கும் நீட் தேர்வு மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. கொரோனா … Read more

நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் அடுத்த ஒரு வாரத்தில் இதற்கு எதிராக தீர்மானம்!

நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் அடுத்த ஒரு வாரத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. தமிழக சட்டமன்ற கூட்டம் கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. அன்று 2021-22ஆம் நிதியாண்டுக்கான முழுமையான திருத்தப்பட்ட மாநில பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அடுத்த நாள் தமிழக அரசு முதன் முறையாக வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டை, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து கடந்த திங்கட் கிழமை முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து … Read more

#BREAKING: நீட் தேர்வு நடைபெறும் மையங்கள் அறிவிப்பு – தேசிய தேர்வு முகமை!

நீட் நுழைவு தேர்வு நடைபெற உள்ள தேர்வு மையங்கள் பற்றி தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெற உள்ள தேர்வு மையங்கள் குறித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நீட் தேர்வை எழுத்தவுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வு மையம் குறித்த தகவலை www.neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதனிடையே, மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ம் … Read more

#BREAKING: நீட் தேர்வு – அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறைவு!!

தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத கடந்த ஆண்டை விட இந்தாண்டு அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறைவு என பள்ளிக்கல்வித்துறை தகவல். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதாவது தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத இதுவரை 6,412 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் விண்ணப்பிக்கும் அவகாசம் முடியும் நிலையில், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 505 பேரும், … Read more

நீட் தேர்வுக்கு பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்க அறிவுரை – பள்ளிக்கல்வித்துறை

அரசு பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளிகள் வாயிலாக நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கு, நீட் நுழைவு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டியில் பிளஸ் 2 தேர்வு நடத்தப்படாத நிலையில், நீட் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளிகள் வாயிலாக நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. … Read more

“NEET” ஏழை மாணவர்களுக்குப் பலம் தருவதாக இருக்கிறது – ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

நீட் தேர்வு அவசியம் தேவை என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநரும் மருத்துவருமான தமிழிசை சவுந்தரராஜன் கருத்து. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநரும் மருத்துவருமான தமிழிசை சவுந்தரராஜன், ஒரு மருத்துவர் என்ற முறையில் கூறுகிறேன், நீட் தேர்வு என்பது அவசியம் தேவை. மிகப்பெரிய மருத்துவக் கல்லூரி உரிமையாளரின் மகளாக இருந்தாலும் கூட நீட் தேர்வில் வெற்றி பெற்றால்தான் மருத்துவராக … Read more

பெரும்பாலானோர் நீட்டுக்கு எதிர்ப்பு – ஆய்வறிக்கை சமர்பித்தபின் நீதிபதி ஏ.கே.ராஜன் பேட்டி!!

எங்களது தனி கருத்துக்களை நாங்கள் ஆய்வு அறிக்கையில் முன் வைக்கவில்லை, ஆய்வு திருப்தியாக இருந்தது என நீதிபதி ஏ.கே.ராஜன் பேட்டி. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்கு கடந்த ஜூன் 10-ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த ஆய்வறிக்கையை முதலமைச்சர் முக ஸ்டாலினிடம், ஏ.கே.ராஜன் தலைமையில் குழு இன்று சமர்ப்பித்தது. இந்த நிலையில், நீட் தேர்வு தாக்கம் குறித்த ஆய்வு அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்த … Read more