#BREAKING: பாஜக கூட்டணி வேட்பாளருக்கு மாயாவதி ஆதரவு!

பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு மாயாவதி ஆதரவு என அறிவிப்பு.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. யஷ்வந்த் சின்ஹா ஜூன் 27-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு (64) அறிவிக்கப்பட்டிருந்தார்.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடியினப் பெண் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பாஜக ஆதரவுக் கட்சிகள் வரவேற்பு அளித்தன. இதன்பின்  தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பிரதமர் மோடி, தேசிய தலைவர் ஜெபி நட்டா, மத்திய அமைச்சர்கள், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் முன்னிலையில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள திரௌபதி முர்மு, தனக்கு ஆதரவுகளை திரட்டி வருகிறார்.

இந்த நிலையில், பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார். இது பாஜகவுக்கு ஆதரவாக எடுத்த முடிவு அல்ல, பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கையை மனதில் வைத்து எடுத்த முடிவு என்று தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment