#BREAKING: கையூட்டு – காவல்துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை.. டிஜிபிக்கு அதிரடி உத்தரவு!

லஞ்சம் வாங்கும் போலீசுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

கையூட்டு (லஞ்சம்) பெறும் காவல்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டுமல்லாது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் குமாரதாஸின் ஓதிய உயர்வு பலன்களை நிறுத்தி வைத்தது எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில், சமுதாயத்தையும், அரசின் நலத்திட்டங்கள் அமல்படுத்தப்படுவதையும் ஊழல் செல்லரிக்கிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்த நிலையில், லஞ்சம் வாங்குவதை கட்டுப்படுத்த உள்துறை செயலர், தமிழ்நாடு டிஜிபி ஆகியோர் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment