#BREAKING : உள்ளாட்சித் தேர்தல் -வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

  • தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
  • இன்று உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.  

சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 97 ஆயிரத்து 975 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில் 76.19 சதவீதமும் , இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73 சதவீதமும் வாக்குகள் பதிவாகியது.

சுமார் 25 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்கு பெட்டிகள்  315 மையங்களில் சீல் வைக்கப்பட்டு இருந்தது.இந்த வாக்கு பெட்டிகள் இன்று காலை 7 மணிக்கு  வாக்கு எண்ணிக்கை கண்கணிப்பாளர்கள் ,தேர்தல் முகவர்கள் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு திறக்கப்பட்டன.

இதை தொடர்ந்து காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.ஒரே நேரத்தில்  4 பதிவுகளுக்கு தேர்தல் நடைபெற்றதால் வாக்களார்கள் 4 வாக்குகள் பதிவு செய்தனர்.ஒட்டு எண்ணும் மையத்தில் முப்பது மேசைகளில் ஓட்டுகள் கொட்டப்படும் .ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர் மற்றும் 3 ஒட்டு எண்ணுவார்கள் பணியில் இருப்பார்கள்.

அவர்கள்  உள்ளாட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், யூனியன் கவுன்சிலர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிகளுக்கு பதிவான ஓட்டுக்களை தனித்தனியாக பிரித்து  ஓட்டுக்களை எண்ணுவதற்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு எடுத்து சென்று ஓட்டுகள் எண்ணப்படும்.வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளரின் முகவர்,வாக்கு எண்ணும் அலுவலர் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.இதற்கான முடிவுகள்  மாலைக்குள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan