#BREAKING: கஞ்சா விற்போர் மீது குண்டர் சட்டம் – டிஜிபி அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் ஏப்ரல் 27 வரை ஒரு மாதத்துக்கு ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 திட்டம் நடத்த டிஜிபி உத்தரவு.

கஞ்சா மற்றும் குட்கா விற்பறோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என காவல்துறைக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 27 வரை ஒரு மாதத்துக்கு ஆபரேஷன் கஞ்சா வேட்டை நடத்த டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 திட்டம் நேற்று தொடங்கிய நிலையில், காவல்துறை உயரதிகாரிகளுக்கு டிஜிபி இன்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் கஞ்சா, குட்கா கடத்தல், பதுக்கல் சங்கிலியை ஒழிக்க, மொத்த கொள்முதல், விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், ஆபரேஷன் கஞ்சா 2.0 திட்டம் மூலம் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பதை உடனடியாக தடுக்கவும் காவல்துறை உயரதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பள்ளி, கல்லூரிகள் அருகே வசிப்பவர்களை கொண்டு வாட்ஸ் அப் குழு உருவாக்கி ரகசிய தகவல்களை சேகரிக்கவும், பார்சல் மூலம் போதை மாத்திரை, போதைப்பொருள் விற்பவர்களை தனிப்படை அமைத்து கைது செய்ய வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளார். சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையர்கள் கஞ்சா ஒழிப்பு பணியில் நேரடி கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்