வாழ்க்கை முழுக்க உங்க துணையோட மகிழ்ச்சியா வாழணுமா?இந்த பழக்கம் மட்டும் போதும்..!

வாழ்க்கை முழுக்க உங்க துணையோட மகிழ்ச்சியா வாழ இந்த பழக்கங்கள் மிகவும் அவசியம்.

தம்பதிகள் நீண்ட காலம் மன மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல. அவர்களுக்குள் இருக்கும் புரிந்துணர்வும், அன்பும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுமே இதற்கு காரணம். பொதுவாகவே ஆண், பெண் இடையே அடிக்கடி பல சண்டைகள் மற்றும் சிக்கல்கள் ஏற்படும். இவை இல்லாமல் இருக்கவேண்டுமென்றால் அங்கு புரிந்துணர்வு என்பது அவசியம். ஒரு உறவு நீண்ட காலம் வரை மகிழ்ச்சியோடு வெற்றிகரமாக இருக்கிறது என்றால் அதில் ஒரு சில பழக்கவழக்கங்களை தம்பதிகள் நிச்சயம் கொண்டிருப்பார்கள். அவற்றை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

நேர்மையான கருத்துக்கள், தொடர்புகள்:

தம்பதிகள் வெகுகாலம் வரை மகிழ்ச்சியாக இருப்பதற்கு நேர்மை முக்கியமான ஒன்று. பேச கூடிய வார்த்தைகளிலும், செயல்களிலும் நேர்மையாக இருக்க வேண்டும். உங்களுக்குள் எந்த உணர்ச்சியையும் மறைத்து வைக்காதீர்கள். அது காலம் கடந்தால் அதுவே பெரிய பாதிப்பாக மாறிவிடும். நீங்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள வேண்டிய முக்கியத்துவத்தை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்.

மோதல், தீர்மானங்கள்:

எல்லா உறவிலும் சண்டை என்பது சகஜம். ஆனால் அதனை அப்படியே விட்டுவிட்டால் அந்த உறவு நீடிக்காது. ஒரு பிரச்சனை ஏற்படுகிறது என்றால் அதனை எந்த முறையில் தீர்க்கிறீர்கள் என்பதும் மிகவும் அவசியம். இதில் நீங்கள் உங்களுடைய நியாயத்தை மட்டும் கேட்காமல் மற்றவரின் கருத்தையும் நிச்சயம் காத்து கொடுத்து கேட்க வேண்டும்.  பக்குவமாக, நல்ல புரிந்துணர்வோடு பிரச்னையை தீர்க்க முயலுங்கள். மனம் விட்டு பேசுவது மிகவும் அவசியம்.

நிதிநிலை:

உறவில் நிதிநிலை என்பது முக்கியமான ஒன்று. ஏனென்றால் சிலருக்கு பணத்தால் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும். பணம் காரணமாகவே தம்பதிகளுக்குள் தற்போது சண்டைகள், வாக்குவாதங்கள் ஏற்படுகிறது. ஒரு உறவில் எல்லாரையும் பார்த்துக்கொள்ள பணம் மிகவும் முக்கியம். அதனால் பணத்திற்காக அல்லது பணவரவு குறைவிற்காக சண்டையிடுவது என்பது உண்மையான உறவை பாதிக்க தொடங்கும். இதுவே பின்னர் உங்களுக்கு பழி உணர்ச்சியை ஏற்படுத்தவும் செய்யும்.

வேடிக்கை, உற்சாகம்:

மகிழ்ச்சியாக இருந்தால் தான் உறவு நிலைக்கும். அதற்கு நிச்சயமாக தம்பதிகள், தொலைபேசியிலோ அல்லது நேரிலோ ஒன்றாக பேசி சிரித்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். ஏதாவது வீடியோக்களை இணைந்து பார்ப்பதன் மூலம் அவர்களை இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள முடியும். முக்கியமாக ஒருவரை ஒருவர் பாராட்டி கொள்வது என்பது அவசியம். அவர்கள் உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பதை நீங்கள் நிச்சயம் வெளிப்படுத்த வேண்டும்.