#BREAKING: கோடநாடு வழக்கு – மேல் விசாரணைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

மறைந்த முன்னாள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து உதகை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்தது. இந்த வழக்கை தொடர்பாக விசாரிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கோடநாடு வழக்கில் மேல் விசாரணைக்கு தடைகோரி அனுபவ் ரவி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தின் அனுமதி இன்றி மறுவிசாரணை நடத்தப்படுவதாக மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைத்தனர்.

மறு விசாரணை நடத்திக்கொண்டே போனால் வழக்கின் விசாரணை முடிவு இல்லாமல் தான் செல்லும் என்றும் வாதமாக வைத்தனர். இதனையடுத்து, கோடநாடு வழக்கில் மறு விசாரணை விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கோடநாடு விவகாரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது போல் உள்ளது என்றும் மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை எனவும் கூறி கோடநாடு வழக்கில் மறுவிசாரணைக்கு தடைகோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

ஏற்கனவே சாட்சி அனுபவ் ரவியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்து, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் மேல் விசாரணைக்கு தடை இல்லை என கூறியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்