#BREAKING : கோடநாடு வழக்கு – சாஜியிடம் போலீசார் மீண்டும் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 10-வது நபராக சேர்க்கப்பட்டுள்ள ஜிதின் ராய் உறவினர் ஷாஜியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017 ஏப்ரல் 24-ஆம் தேதி, நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தற்போது கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 10-வது நபராக சேர்க்கப்பட்டுள்ள ஜிதின் ராய் உறவினர் ஷாஜியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையை தனிப்படை காவல்துறையினர்  உதகை பழைய மாவட்ட எஸ்பிஐ அலுவலகத்தில் வைத்து நடத்தி வருகின்றனர். ஷாஜியை பொறுத்தவரையில் அரசுத்தரப்பு வழக்கில் 36-வது சாட்சியாக இவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஷாஜியிடம், இந்த சம்பவம் நடைபெற்று இவர்கள் தப்பித்து சென்ற  போது,  இவர்கள் சோதனை சாவடியில் சிக்குகின்றனர். அப்போது இவர்கள் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் தான் இருந்துள்ளனர். அங்கிருந்து அவர்கள் மீட்கப்பட்ட பின், அவரது உறவினரான ஷாஜியிடம், ஜிதின் மீட்கப்பட்டதாக கூறுகிறார். அதனடிப்படையில் தான் இவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.