#BREAKING: ராணுவத்தில் வேலை.. ‘Agnipath’ திட்டத்திற்கு ஒப்புதல் – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு!

இந்திய ராணுவத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்.

இந்திய ராணுவத்தில் அக்னிபாத் என்ற புதிய ராணுவ முறையை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகப்படுத்தினார். இந்திய ராணுவத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்காக பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு இன்று வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த நம் இளைஞர்களுக்கு ராணுவ சேவை வாய்ப்பை வழங்க இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் இந்திய இளைஞர்களுக்கு ஆயுதப் படையில் சேர வாய்ப்பு அளிக்கப்படும். ‘அக்னிபாத்’ திட்டத்தின் கீழ், ஆயுதப் படைகளில் இளைஞர்களின் சுயவிவரத்தை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது அவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களைப் பயிற்றுவிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கிய நிலைகளை மேம்படுத்துவதற்கும் உதவும் என்றும் கூறியுள்ளார்.

நாட்டின் பாதுகாப்புத்துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை மத்திய அரசு உருவாக்கியது. Tour of duty என்ற இந்த திட்டத்தில் நியமிக்கப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இந்த நிலையில், அக்னிபாத் முறையில் சேரும் வீரர்கள் ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பார்கள் என்றும் இந்தத் திட்டம் பல்வேறு துறைகளில் புதிய திறன்களுடன் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் எனவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment