#BREAKING : ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை…!

ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஒருமுறை பயன்படுத்தும் தடுப்பூசியை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்து, வெளிநாடுகளில் பயன்படுத்தி வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் பயன்பாட்டில் உள்ள தடுப்பூசியை இந்தியாவிலும் அனுமதிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.