#BREAKING: தங்க வேட்டையில் இந்தியா..பேட்மிண்டன், டேபிள் டென்னிஸில் தங்கம்!

பேட்மிண்டனில் இன்று ஒரே நாளில் மட்டும் 3 தங்க பதக்கங்களை வென்று இந்திய வீரர்கள் அசத்தல்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய் ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி தங்கம் வென்றது. இறுதி போட்டியில், சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி இங்கிலாந்தின் பென் லேன் மற்றும் சீன் வெண்டி இரட்டையரை 15-21, 13-21 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றனர். இந்த வெற்றிக்கு மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் பதக்கம் கிடைத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் காமன்வெல்த் பேட்மிண்டனில் இன்று ஒரே நாளில் மட்டும் 3 தங்க பதக்கங்களை வென்று இந்திய வீரர்கள் அசத்தியுள்ளனர். இதற்கு முன்னதாக பேட்மிண்டனில் ஆடவர் ஒற்றையர் பிரிவிலும், மகளிர் ஒற்றையர் பிரிவிலும் தங்க பதக்கத்தை பெற்றிருந்த இந்தியா, தற்போது ஆடவர் இரட்டையர் பிரிவிலும் தங்க பதக்கத்தை வென்று அசத்திருக்கிறது.

மேலும், காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் தமிழக வீரர்  சரத் கமல் தங்க பதக்கம் வென்றார். உலகின் 20ம் நிலை வீரரான இங்கிலாந்தின் லியாம் பிட்ச்போர்டை 4-1 என்ற கணக்கில் சரத் கமல் வீழ்த்தினார். சரத் கமல் காமன்வெல்த் போட்டியில் 3வது தங்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் போட்டியின் நிறைவு நாளான இன்று இந்தியாவிற்கு அடுத்தடுத்த தங்கம் பதக்கம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியான ஒன்று.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment