#BREAKING : இம்ரான்கானை உடனடியாக விடுவிக்க வேண்டும்..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இம்ரான்கானை  உடனடியாக விடுவிக்க வேண்டும் என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு. 

ஊழல் வழக்கில் இஸ்லாமாத் நீதிமன்றத்தில் மே 9-ஆம் தேதி ஆஜராக வந்த பாகிஸ்தான் முன்னாள் முதல்வர் இம்ரான் கானை நீதிமன்ற வளாகத்தில் அறை கண்ணாடி உடைத்து பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.இதனால் பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழல் நிலவியது.

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் 144 தடை விதிக்கப்பட்டு பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும் இம்ரான்கான் கைதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், 100-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில மணி நேரத்திற்கு முன், பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது செய்யப்பட்டது முற்றிலும் சட்டவிரோதமானது என்றும், அவரை இன்னும் ஒரு மணி நேரத்தில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.