#BREAKING: ஹெலிகாப்டர் விபத்து – விசாரணை அறிக்கை தாக்கல்!

குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தொடர்பான முப்படைகளின் விசாரணை அறிக்கை தாக்கல்.

கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர். முப்படைகளின் குழு ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து முழு அறிக்கையை தயார் செய்துள்ளது. இந்த நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜிநாத் சிங்கிடம்  ஹெலிகாப்டர் விபத்து தோதான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர்.

இந்த விசாரணை அறிக்கையில், ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் மற்றும் இனிமேல் நடக்காமலிருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து இருப்பதாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டர் விபத்து பற்றி ஏர் மார்ஷல் மன்வேந்தர சிங் தலைமையில் முப்படைகளின் விசாரணை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்