#BREAKING: இதற்கான ஹால் டிக்கெட் வெளியீடு.. அடுத்த மாதம் முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு..

முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என யுஜிசி தலைவர் அறிவிப்பு.

இரண்டாம் கட்ட CUET – UG தேர்வுக்கான ஹால் டிக்கெட் https://cuet.samarth.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
வரும் 4,5,6 தேதிகளில் CUET – UG 2-ம் கட்ட தேர்வு நடைபெற உள்ள நிலையில், 6.80 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.

மேலும், முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ்குமார் அறிவித்துள்ளார். பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET PG 2022) செப்டம்பர் 1 முதல் 7 வரையிலும் மற்றும் செப்டம்பர் 9 முதல் 11-ஆம் தேதி வரையிலும் முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளார்.

2022-2023 கல்வி அமர்வுக்கு 66 மத்திய மற்றும் பங்கேற்கும் பல்கலைக்கழகங்களுக்கு CUET PG 2022 தேர்வை NTA நடத்தும். இது சுமார் 3.57 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) முறையில் நடத்தப்படும். இந்தியாவிற்கு வெளியே 500 நகரங்கள் மற்றும் 13 நகரங்களில் தேர்வு நடைபெறும் என்று யுஜிசி தலைவர் தெரிவித்துள்ளார்.

தேர்வுத் தாள் குறியீடு மற்றும் ஷிப்ட்/நேரத்துடன் விரிவான அட்டவணை NTA ஆல் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். இதனிடையே, நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஏற்கனவே CUET தேர்வு அண்மையில் நடைபெற்றது.

author avatar
Castro Murugan

Leave a Comment