#BREAKING: குஜராத் பாலம் விபத்து – உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

குஜராத் மோர்பி தொங்கும் பாலம் விபத்து குறித்த வழக்கை வரும் 14-ஆம் தேதி விசாரிக்கிறது உச்சநீதிமன்றம். 

குஜராத் தொங்கும் பாலம் விபத்து குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக்கோரி பொதுநல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கை வரும் 14-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லலித் ஒப்புதல் அளித்துள்ளார். நாடு முழுவதும் பழமைவாய்ந்த பொது கட்டமைப்புகளில் பாதுகாப்பு தணிக்கை நடத்தவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தொங்கும் பாலம் அறிந்து ஆற்றில் விழுந்ததில் இதுவரை 142 பேர் இறந்ததால் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனிடையே, குஜராத் மோர்பி தொங்கும் பாலம் அறுந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment