#BREAKING: இலங்கைக்கு பொருட்களை அனுப்ப குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு!

இலங்கைக்கு பொருட்கள் அனுப்ப 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து உத்தரவு.

இலங்கைக்கு பொருட்களை அனுப்ப 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அந்த பொருள்களை அனுப்பி வைப்பதற்காக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை செயலர் ஜெசிந்தா, உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் பிரபாகர் குழுவில் உள்ளனர். ஆவின் மேலாண் இயக்குநர் சுப்பையன், மருந்து கொள்முதல் இயக்குநர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய இரு இடங்களில் இருந்தும் பொருட்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த மாதம் இறுதிக்குள் அனுப்ப ஏற்பாடுகள் தீவிரபப்படுத்தி வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்