#BREAKING: தங்கம் விலை குறைவு.. நகை விரும்பிகளுக்கு மகிழ்ச்சி!

சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,740க்கும், ஒரு சவரன் ரூ.37,920க்கும் விற்பனை.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை குறைந்திருப்பது நகை விரும்பிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.35 குறைந்து, ரூ.4,740க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை 50 காசு குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.67க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான காரணிகளுக்கு மத்தியில், தங்கத்தின் விலை அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டாலும், அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இதன் காரணமாக தங்கம் விலையானது சரிவில் காணப்படுகிறது. பங்குச்சந்தையின் 3வது வர்த்தக நாளான இன்று சற்று சரிவில் காணப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், தங்கத்தின் மீதான முதலீடு பக்கம் மக்கள் திரும்பி வருகிறார்கள்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment