#BREAKING: இரு அவைகளிலும் நிறைவேறியது ‘தேர்தல் சட்ட திருத்த மசோதா’..!

மாநிலங்களவையில் வாக்காளர் அடையாள அட்டையுடன்  ஆதார் எண்னை  இணைப்பதற்க்கான ‘தேர்தல் சட்ட திருத்த மசோதா’ நிறைவேற்றம் செய்யப்பட்டது. 

இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும், தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில்,தேர்தல் ஆணையம் 4 வகையான தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர உள்ளதாக கூறப்படுகிறது. அதில், குறிப்பாக வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவும் ஒன்று. இதற்கு மத்திய அமைச்சரவை கடந்த வாரத்தில் ஒப்புதல் அளித்திருந்தது.

மத்திய அமைச்சரவை கருத்துப்படி, இந்த மசோதா மூலம் ஒருவர் பல வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்பதாகும். மேலும், ராணுவத்தில் பணியாற்றும் பெண் வாக்குப்பதிவின்போது ஊரில் இல்லாவிட்டால் அவருக்கு பதில் அவரது கணவர் வாக்களிக்க இந்த மசோதா வழிவகுக்கிறது. ஆனால், ஆதார் எண் இல்லாதவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படலாம் என்று கூறி ஆபத்தான இந்த தேர்தல் சீர்திருத்த மசோதாவை அனைவரும் எதிர்க்க வேண்டும் சில அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தேர்தல் சட்ட திருத்த மசோதாவிற்கு காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், இன்று மாநிலங்களவையில் வாக்காளர் அடையாள அட்டையுடன்  ஆதார் எண்னை இணைப்பதற்க்கான ‘தேர்தல் சட்ட திருத்த மசோதா’ நிறைவேற்றம் செய்யப்பட்டது.

இதற்கிடையில், நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையில்  மக்களவையிலும் ‘தேர்தல் சட்ட திருத்த மசோதா’ நிறைவேற்றம் செய்யப்பட்டது.  இரு அவைகளிலும் நிறைவேறியது தேர்தல் சட்ட திருத்த மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு விரைவில் அனுப்பப்படவுள்ளது.

author avatar
murugan