#BREAKING :கொரோனா எதிரொலி – 168 ரயில்கள் ரத்து.!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மிகிக்குறைவான டிக்கெட்டுகள் முன்பதிவானதால் 168 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளை முதல் மார்ச் 31-ம் தேி வரை 168 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக ரயில் பயணத்தை பொதுமக்கள் மேற்கொள்வதை  தவிர்த்து வருகின்றன. அதனால் மார்ச் மாதத்தில் இதுவரை 60% ரயில் டிக்கெட்டை பயணிகள் ரத்து செய்துள்ளதாக நேற்று நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ரயில்வே அதிகாரிகள் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 169 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா வைரசால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 141 இந்தியர்கள், 25 வெளிநாட்டினர்கள் என மொத்தம் இதுவரை 169 ஆக உயர்ந்துள்ளது.

 

author avatar
murugan