#BREAKING: இந்த மாவட்டங்களில் இ-பாஸ் அனுமதி கொடுக்க வேண்டாம்..?

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய  மாவட்டங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்குள் செல்ல இ பாஸ் அனுமதி கொடுக்க வேண்டாம் என தமிழக  அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்ல தமிழக அரசு இ பாஸ் என்ற சேவையை தொடங்கியது. இந்த சேவை மூலம் திருமணம், இறப்பு, மருத்துவ பரிசோதனை போன்ற காரணங்களுக்காக மட்டும் மாவட்டம் விட்டு  மாவட்டங்கள் செல்ல அனுமதி கொடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய  மாவட்டங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்குள் செல்ல இ பாஸ் அனுமதி கொடுக்க வேண்டாம் என வாய்மொழியாக தமிழக  அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த 4 மாவட்டங்களில் மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே மாவட்டம் விட்டு  மாவட்டங்கள் செல்ல அனுமதி கொடுக்கப்போவதாகவும் மற்ற காரணங்களும்  அனுமதிக்கக் கூடாது என தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் எந்தவித அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று 1,392 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

author avatar
murugan