BREAKING: தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் என கூறி திமுக உயர்நீதிமன்றத்தில் மனு .!

  • தமிழகத்தில் 315 வாக்கு மையங்களில் வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
  • உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை 315 வாக்கு மையங்களில் வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.அந்த மனுவில்  எடப்பாடி , சங்ககிரி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் என மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க திமுக கோரிக்கை விடுத்த நிலையில் நீதிமன்றம் நாளை விசாரிப்பதாக அறிவித்துள்ளது. மதியம் 01.30 மணிக்கு மேல் தொடரப்பட்ட வழக்குகளை தலைமை நீதிபதி கவனத்தில் கொண்டு சென்ற பிறகு விசாரிக்க இயலும் , மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்தால் நாளை காலை முறையிடுங்கள்  என கூறியுள்ளனர்.

சற்று நேரத்திற்கு முன் மாநில தேர்தல் கமிஷனரை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.இது குறித்து நீதிமன்றத்தை நாட உள்ளதாக அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan