#BREAKING: சென்னையில் கொரோனா பாதிப்பு 47 ஆயிரத்தை கடந்தது

சென்னையில் இன்று ஒரே நாளில்  1,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அந்த வகையில் இன்றும் சென்னையில் ஒரே நாளில்  1,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.   தற்போது, வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 47,650 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அங்கு இதுவரை 27,986 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 18,969 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.694 பேர் உயிரிழந்துள்ளனர்.