#Breaking: தமிழகத்தில் 21 வயது மாணவருக்கு கொரோனா.! பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வு.!

அயர்லாந்திலிருந்து சென்னை வந்த 21 வயது மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மார்ச் 17ம் தேதி சென்னை வந்த மாணவர், கொரோனா அறிகுறியுடன் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மாணவரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா தாக்கப்பட்ட 21 வயது இளைஞரை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார். 

தமிழகத்தில் ஏற்கனவே இருவரை கொரோனா தாக்கியிருந்த நிலையில், தற்போது 3வது நபரை கொரோனா தாக்கியுள்ளது. இதற்குமுன் முதல் கொரோனா தாக்குதல் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று டெல்லியிலிருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று அயர்லாந்திலிருந்து சென்னை வந்த 21 வயது மாணவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்