#Breaking: சென்னையில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7000 ஐ கடந்தது.!

சென்னையில் இன்று ஒரே நாளில் 364 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளத்தால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7000 ஐ கடந்தது.

தமிழகத்தில் இன்று புதிதாய் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்று 3 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 364 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7117 ஆக அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.