#Breaking:”சர்ச்சைக்குரிய கேள்வி;மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்”-சோனியா காந்தி கண்டனம்!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்த்தாள் விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற மத்திய அரசின் கல்வி வாரியமான சி.பி.எஸ்.சி.-யின் பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வுக்கான வினாத்தாளில் குடும்ப ஒழுக்கம் தொடர்பாக இடம் பெற்ற கேள்வியில்,கணவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடந்தால்தான் குழந்தைகள் பெற்றோருக்கு கீழ்படிவார்கள் என்று பெண் அடிமைத்தன நோக்கில் கேட்கப்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது.
மேலும்,இதற்கு சரியான தலைப்பிடுமாறு தரப்பட்டுள்ள நான்கு வாய்ப்புகளில், குழந்தைகளின் ஒழுங்கீனத்துக்கு யார் பொறுப்பு, வீட்டில் ஒழுக்கம் சீர்கெட என்ன காரணம், வீட்டில் குழந்தைகள், பணியாளர்களுக்கான இடம், குழந்தைகள் உளவியல் என இடம் பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்,இதுகுறித்து அந்த கேள்வித்தாளின் பகுதியை வெளியிட்டு,நாம் நம் குழந்தைகளுக்கு என்ன கற்பிக்கிறோம்? சிபிஎஸ்இ எங்கள் குழந்தைகளை இப்படி இழைத்ததற்கு விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரசை சேர்ந்த லட்சுமி ராமச்சந்திரன் பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து,இந்த வினாத்தாள் சர்ச்சை தொடர்பாக பாஜக அரசு, பெண்களுக்கு எதிரான கருத்துகளை ஆதரிப்பதாக பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு வினாத்தாளில் இடம்பெற்றிருந்த பெண்கள் தொடர்பான கருத்துகள் கண்டிக்கத்தக்கவை என்றும்,சிபிஎஸ்இ உடனடியாக இந்த வினாத்தாளை திரும்பப் பெற வேண்டும் என்றும்,இது தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மக்களவையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

ஆனால்,மக்களவையில் மத்திய அரசு சார்பில் இதற்கு மன்னிப்பும் கோர வில்லை என்று கூறப்படுகிறது.இதனையடுத்து,காங்கிரஸ் மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.