#BREAKING: செஸ் ஒலிம்பியாட் – இந்திய பி அணி மற்றும் இந்திய மகளிர் அணிக்கு வெண்கலம்!

போர் பதற்றத்துக்கு மத்தியில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் உக்ரைன் அணி தங்கம் வென்று அசத்தல்.

சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் கடந்த 12 நாட்களாக நடைபெற்று வந்த செஸ் ஒலிம்பியாட் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று 11-வது மற்றும் கடைசி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடரின் மகளிர் பிரிவில் இந்திய ஏ அணி வெண்கலம் பதக்கம் வென்றது. மகளிர் பிரிவில் உக்ரைன் அணி தங்க பதக்கமும், ஜார்ஜியா அணி வெள்ளி பதக்கமும் வென்றுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதன் முறையாக இந்திய மகளிர் அணி பதக்கம் வென்றுள்ளது. இதற்கு முன்பு, செஸ் ஒலிம்பியாட் தொடரின் 11-வது மற்றும் கடைசி போட்டியில் ஜெர்மனி அணியை இந்திய பி அணி வென்றது. இதன் மூலம் இந்தியா பொது (ஓபன்) பிரிவில் உள்ள பி அணி வெண்கலம் பதக்கத்தை கைபற்றிய நிலையில், மகளிர் அணியும் வெண்கலம் பதக்கத்தை வென்றுள்ளது. ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் மற்றும் அர்மீனியா அணி வெள்ளி பதக்கம் வென்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment