#BREAKING: குரங்கம்மை தொற்று – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு!

குரங்கு அம்மை நோய் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய சுகாதார அமைச்சகம்.

குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவிலும் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் சில மாநிலங்களில் குரங்கம்மை நோய் படிப்படியாக சற்று வேகமாக பரவி வருகிறது. கேரள மாநிலத்தில் இதுவரை 5 பேருக்கு நோய் தொற்று பஹிபு கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்று டெல்லியில் 3 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது செய்யப்பட்டது. இதனால் நாட்டில் குரங்கம்மை பாதித்தோரின் எண்ணிக்கை 8-ஆக உள்ளது.

குரங்கம்மை நோய் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், குரங்கம்மை நோயை தடுக்க செய்ய கூடியவை, செய்ய கூடாதவை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், முகக்கவசம் அணிதல், நோய் பாதித்தவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

குரங்கம்மை பாதித்தவருடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும் குரங்கம்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது. குரங்கம்மை நோயாளிகள் பயன்படுத்திய துணிகள், படுக்கை, துண்டுகளை பிறர் பயன்படுத்த கூடாது. க்ரங்கம்மை குறித்ததவறான தகவலை பரப்ப வேண்டாம் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும், குரங்கு அம்மைக்கான  அறிகுறி இருப்பவர்கள் பொது இடங்களுக்கு செல்ல கூடாது. குரங்கம்மை தொற்று உள்ளானவர்களிடம் பாகுபாடு காட்டக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment