#BREAKING : ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடை – ஆர்எஸ்எஸ் அமைப்பு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு…!

காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். முறையீடு. 

கடந்த இரு தினங்களுக்கு முன்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதற்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கி இருந்தது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் சுமார் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அவர்களது உடை அணிந்து, ஊர்வலம் செல்வதற்கு திட்டமிட்டு இருந்தது.

இந்த நிலையில், அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  பொது அமைதியை நிலைநாட்ட வேண்டியுள்ளதால் தமிழகத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி எந்த இடத்திலும் எந்த அமைப்பும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். முறையீடு செய்துள்ளது. மனு எண்ணிடப்பட்டால் நாளை விசாரணைக்கு எடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment