#BREAKING: அதிக பாதிப்புள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள்?- தலைமைச்செயலர் ஆலோசனை!!

கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் தேவையா என்பது குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களின் கூடுதல் கட்டுப்பாடுகள் தேவையா என்பது குறித்து ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

மேலும், நெல்லை, கோவை, திருப்பூர், திருச்சி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரிப்பால் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் காணொளி மூலம் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் ஏற்கனவே இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்