#BREAKING: ஆடர்லி முறை; அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு உத்தரவு!

ஆடர்லி தொடர்பாக டிஜிபி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

ஆடர்லி முறை ஒழிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆங்கிலேயே ஆடர்லி முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக்கேடானது. ஆடர்லி முறையை ஒழிக்க ஒரு வார்த்தை போதும், ஆனால் அரசு மற்றும் டிஜிபியிடம் இருந்து அது வருவதில்லை என நீதிபதி எஸ்எம் சுப்ரமணியம் கூறியுள்ளார். ஆடர்லி பயன்படுத்தும் காவல் உயரதிகாரிகளை கேள்வி கேட்க மக்களுக்கு உரிமை உண்டு.

ஆடர்லிகள் விவகாரத்தில் முதலமைச்சரின் எச்சரிக்கை மட்டும் போதாது, உரிய நடவடிக்கை தேவை என்றும் கூறினார். ஆடர்லில் ஒழிப்பு பற்றி உள்துறை செயலாளர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? என்று கேள்வியை எழுப்பிய நீதிமன்றம், எடுத்த நடவடிக்கைகள் குறித்து டிஜிபி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது,

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment