#BREAKING: கருக்கலைப்பு.. அனைத்து பெண்களுக்கும் உரிமை உண்டு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

கருக்கலைப்பு செய்து கொள்ள அனைத்து பெண்களுக்கும் உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

சட்டப்பூர்வ மற்றும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்துகொள்ள பெண்களுக்கு உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. யாருக்கு எந்த சூழலில் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்பது பற்றிய விதிமுறையை ஒழுங்குபடுத்துவது குறித்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் விரிவான தீர்ப்பு அளித்துள்ளார். அதன்படி, சட்டப்பூர்வமாக, பாதுகாப்பாக அனைத்து பெண்களும் கருக்கலைப்பு செய்ய தகுதி உடையவர்கள் ஆவார்கள். திருமணமான, ஆகாத அனைத்து பெண்களும் சட்டப்பூர்வமாக கருக்கலைப்பு செய்து கொள்ள உரிமை உண்டு என்றும் திருமணமாகி கைவிடப்பட்ட & திருமணமாகாத பெண்கள் 24 வாரம் வரையிலான கருவை கலைக்கலாம் எனவும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment