#BREAKING: ஆருத்ரா கோல்டு நிறுவனம்; 70 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்!

ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குநர்கள் உள்ளிட்ட 70 பேரின் வங்கி கணக்குகளை முடக்கிய காவல்துறை.

ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குநர்கள் உள்ளிட்ட 70 பேரின் வங்கி கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர். ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர் பாஸ்கர், மோகன் பாபு ஏற்கனவே கைதான நிலையில், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. ஆருத்ரா வழக்கு விசாரணை அதிகாரியாக பொருளாதர குற்றப்பிரிவு எஸ்.பி. ஜெயச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆருத்ரா நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.3.41 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ஒரு லட்சம் பணம் கட்டினால் மாதம் ரூ.30 ஆயிரம் வட்டி தருவதாக விளம்பரம் செய்து ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம், தமிழகம் முழுவதும் 13 இடங்களில் கிளைகளை தொடங்கி, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதந்தோறும் 10% முதல் 30% வரை வட்டி தருவதாகக் கூறி, ரூ.1,678 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த பணத்தை திரும்ப கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நிறுவனத்தின் இயக்குனர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment