#BREAKING: இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 3,645 பேர் பலி… 3,79,257 பேர் பாதிப்பு!!

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று முன் எப்போதும் இல்லாத அளவாக 3 லட்சத்து 79 ஆயிரத்தை கடந்துள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை முன்பைவிட, இந்த இரண்டாவது அலையில் பாதிப்பு அதிகமாக கண்டறியப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் ஒரே நாளில், கடந்த 24 மணி நேரத்தில் 3,79,257 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 1,83,76,524 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 3,645 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை மட்டுமல்லாமல் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுவைர கொரோனாவால் இறந்தோரின் எண்ணிக்கை 2,01,187 லிருந்து 2,04,832 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,69,507 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், மொத்தம் வீடு திரும்புவார்கள் எண்ணிக்கை 1,48,17,371 லிருந்து 1,50,86,878 ஆக அதிகரித்துள்ளது என்பது மனஉறுதியை அளிக்கிறது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் விகிதம் 82.33% ஆகவும், உயிரிழப்பு விகிதம் 1.12% ஆகவும் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 30,84,814 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்