#Breaking:30 நிமிட சந்திப்பு நிறைவு;பிரதமரிடம் முதல்வர் பேசியது என்ன?..!

டெல்லி:இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவ மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை.

திமுக அலுவலக திறப்பு விழா மற்றும் பிரதமரை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.அந்த வகையில், பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்றம் வருகை தந்தார்.நாடாளுமன்றம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுக உறுப்பினர்கள் வரவேற்றனர்.

சந்திப்பு நிறைவு:

இந்நிலையில்,நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள  அலுவலகத்தில்பிரதமர் மோடியை, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து பேசினார்.முதல்வர் பிரதமரின் இந்த சந்திப்பு 30 நிமிடங்களில் நிறைவு பெற்றதாக கூறப்படுகிறது.

பிரதமரிடம் பேசியது என்ன?:

இந்நிலையில்,இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உயிர்காக்கும் மருந்துகள்,உணவுப்பொருட்கள் உள்ளிட்டவைகளை கொடுத்து உதவ அனுமதிக்க வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன்படி,இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் வழியாக இலங்கை தமிழர்களுக்கு உதவிகளை வழங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பச்சிளம் குழந்தையுடன் ஆபத்தான கடல் பயணம்:

ஆபத்தான கடல் பயணத்தில் பச்சிளம் குழந்தையுடன் இலங்கை தமிழர்கள் 16 பேர் தமிழகம் வந்த நிலையிலும்,இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்கள் மேலும் தமிழகம் வரும் சூழலிலும் பிரதமரிடம் முதல்வர் இத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய கோரிக்கைகள்:

மேலும்,மேகதாது விவகாரம்,நீட் விலக்கு,தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை விடுவித்தல்,மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் விவகாரம்,மழை வெள்ளம் மற்றும் மாநில அரசின் திட்டங்களுக்கான நிதி,ஜிஎஸ்டி நிலுவை தொகையை விடுவித்தல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம்  முதல்வர் ஸ்டாலின் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.