சிறையில் இருப்பவர்களின் உற்ற தோழன் புத்தகங்கள் மட்டுமே.! திமுக எம்.பி கனிமொழி கருத்து.!

சிறையில் உள்ள சகோதர சொகத்தரிகளுக்கு உற்ற தோழனாக இருப்பது புத்தங்கள் மட்டுமே. – திமுக எம்பி கனிமொழி பேச்சு.

சென்னையில் புத்தக கண்காட்சி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த புத்தக திருவிழாவில் கலந்து கொண்ட திமுக எம்பி கனிமொழி சிறைவாசிகளுக்கு புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  புத்தங்கள் தான் மனிதர்களுக்கு புதிய உலகத்தையும் புதிய புரிதலை வெளிக்காட்டும் கருவி. மிக பெரிய தலைவர்கள் புத்தகங்களை வாசித்தவர்களாக தான் இருந்துள்ளார்கள். மனிதர்களை நேசிக்க கூடிய, ஒன்றிணைக்க கூடிய கருத்துக்களை தலைவர்கள் எழுதியுள்ளார்கள். என குறிப்பிட்டார்.

மேலும், சிறையில் உள்ள சகோதர, சகோதரிகளுக்கு உற்ற தோழனாக இருப்பது புத்தங்கள் மட்டுமே. அதனை நானே உணர்ந்துள்ளேன். அதனால் என்னால் கொடுக்க முடிந்த அளவு சுமார் 150 புத்தகங்களை நான் கொடுத்துள்ளேன். எது கிடைத்தாலும் படித்து விடுங்கள். டிஜிட்டல் வழியில் புத்தகங்கள் மாறலாம். ஆனால், வாசிப்பு பழக்கம் மாறாகூடாது எனவும் திமுக எம்.பி கனிமொழி பேசியுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment