பொம்மை பின்னணி இசை டாப் கிளாஸ் – எஸ்.ஜே.சூர்யா.!

இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நீண்ட ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் திரைப்படம் பொம்மை. இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்.

இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய எஸ்.ஜே.சூர்யா “பொம்மை படத்தை ஜூலை மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுளேன். படத்திற்கு யுவன் சார் அருமையான பாடல்களை கொடுத்துள்ளார். ரத்தமும் சதையும் பிணைந்த ஒரு இசையை பண்ணிருக்காரு. எமோஷ்னலாக படத்தை வேற லெவலுக்கு எடுத்து சென்றுள்ளார். பின்னணி இசை டாப்..டாப்..டாப் கிளாஸ்-ஆக இருக்கும்” என தெரித்துள்ளார்.

பொம்மை படத்தின் ஆடியோ வெளியிட்டு உரிமைத்தை திங்க் மியூசிக் நிறுவனம்  நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதற்கான வீடியோ ஒன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளது. வீடியோவில் யுவன் மியூசிக் அருமையாக உள்ளதால் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னை இசை மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.