போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை சீனாவில் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது !!!

  • சீனாவில் உள்ள ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை இயக்க கூடாது என அந்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
  • அமெரிக்காவின் எப்ஏஏவிடம் பேசி பாதுகாப்பை உறுதி செய்த பின்பு  விமானத்தை இயக்க அனுமதி வழங்கப்படும்.

எத்தியோப்பியாவில் நேற்று போயிங் 737 மேக்ஸ் 8 விமானம் புறப்பட்ட 6  நிமிடத்தில் கீழே விழுந்து  157 பேர் உயிரிழந்தனர்.கடந்த அக்டோபர் மாதம் இந்தோனேஷியா வில் போயிங் 737 மேக்ஸ் 8 விமானம் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட 13 நிமிடத்தில் விழுந்து 189 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இரு விமானமும் புறப்பட்ட சில நிமிடத்தில் விபத்துக்குள்ளானது. எத்தியோப்பியா விமானம் விபத்து நடப்பதற்கு முன்னதாக விமானி விமானத்தை இயக்க  சிரமமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில்  போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்த சீனா தடை விதித்துள்ளது.
சீனாவில் உள்ள ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை இயக்க கூடாது என அந்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
போயிங்  அமெரிக்காவின் எப்ஏஏவிடம் பேசி பாதுகாப்பை உறுதி செய்த பின்பு  விமானத்தை இயக்க அனுமதி வழங்கப்படும் என  சீனா விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
author avatar
murugan

Leave a Comment