பிஎம்டபிள்யூ ஷேடோ எடிசன் 3 சீரிஸ் விற்பனைக்கு..!!

புதிய பிஎம்டபிள்யூ ஷேடோ எடிசன் 320டீ வேரியண்ட்டிலும், 330ஐ எம் ஸ்போர்ட் மாடலிலும் கிடைக்கிறது. வசீகரத்தை கூட்டும் அம்சங்களுடன் மிகவும் கவர்ச்சியான  புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஷேடோ எடிசன் மாடல் வந்திருக்கிறது. மேலும், இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ஹெட்லைட்டில் புகை சூழ்ந்தது போன்ற கரும் பூச்சு கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்புற கிட்னி க்ரில் அமைப்பில் பளபளப்பு மிகுந்த கருப்பு வண்ணம் தீட்டப்பட்டு இருக்கிறது. இந்த காரில் விசேஷமான டிசைன் கொண்ட 18 அங்குல அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. புதிய ஷேடோ எடிசன் காரில் இரட்டை வண்ண அப்ஹோல்ஸ்ட்ரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 8.7 அங்குல திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெர்று இருக்கிறது. 10.5 அங்குல திரையுடன் கூடிய இன்ஸட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. ரிவர்ஸ் கேமரா, பார்க்கிங் சென்சார் மற்றும் 250வாட் ஆடியோ சிஸ்டம், 330ஐ மாடலில் வேரியபிள் ஸ்போர்ட் ஸ்டியரிங் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

சாதாரண மாடலில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் இந்த காரில் தக்கவைக்கப்பட்டு இருக்கிறது. எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. 330ஐ எம் ஸ்போர்ட் பெட்ரோல் மாடலில் 2.0 லிட்டர்் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 248 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 320டீ ஸ்போர்ட் டீசல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இந்த மாடலில் 8 ஸ்பீடு ஆட்டோமேமட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. பிஎம்டபிள்யூ 330ஐ மாடல் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 5.8 வினாடிகளில் எட்டிவிடும். 320டீ மாடலானது 7.2 வினாடிகளில் எட்டும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஷேடோ எடிசன் காரின் பெட்ரோல் மாடல் ரூ.47.30 லட்சம் விலையிலும், 320டீ டீசல் மாடல் ரூ.41.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

Recent Posts

IPL2024: ஹைதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற கொல்கத்தா..!

IPL2024: கொல்கத்தா அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல்…

7 hours ago

லைசன்ஸ் பெற இனி RTO ஆபீஸுக்கு செல்ல வேண்டாம்.. ஜூன் 1 முதல் புதிய விதி அறிமுகம்.!

சென்னை: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போதயை நடைமுறையின்படி, ஒரு தனிநபர் ஒட்டுநர் உரிமம் பெற வேண்டும்…

11 hours ago

‘நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்’ – பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவிக்கும் ஹர்பஜன் சிங்!

சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்ற, இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் விருப்பம்…

11 hours ago

படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் பண்ணனும்! பலே திட்டம் போட்ட ரஜினிகாந்த் !

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்ற விஷயங்களில் ஒன்று என்னவென்றால் பழைய…

11 hours ago

அடுத்த டார்கெட் கோப்பா அமெரிக்கா தான் !! மெஸ்ஸி ரசிகர்களுக்கு குட் நியூஸ் ..!

சென்னை : வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ள கோப்பா அமெரிக்கா தொடரிலும் அதற்கு முன் அர்ஜென்டினா அணி விளையாடவுள்ள நட்புரீதியான போட்டிகளிலும் (Friendly Match) லியோனல் மெஸ்ஸி…

12 hours ago

குருவின் பரிபூரண அருள் கிடைக்க நீங்கள் செய்ய வேண்டியது..!

குரு பகவான் -குரு பகவானின் அருள் கிடைக்க செய்ய வேண்டியவை என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இந்து சமய வழிபாட்டில் பல்வேறு வழிபாடுகள் உள்ளது. அதில் நவகிரக…

12 hours ago